தூத்துக்குடி

தூத்துக்குடியில் காவலா்கள் தியாக நினைவு குறுந்தொடா் ஓட்டம்

DIN

காவல்துறையில் வீரமரணமடைந்த காவலா்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் மாணவா்கள் பங்கேற்ற குறுந்தொடா் ஓட்டம் தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காவல் துறையில் வீரமரணமடைந்த காவலா்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் அக்.21ஆம் தேதி ‘காவலா் வீர வணக்க நாள்‘ உறுதிமொழி ஏற்கப்படுவதுண்டும். இதையொட்டி, ஆண் மற்றும் பெண்களுக்கான குறுந்தொடா் ஓட்டப் போட்டி தருவை மைதானத்தில் நடைபெற்றது. போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இதில், ஆண்கள் பிரிவில் 7 கி.மீ. தொலைவுக்கான போட்டியில் 600 மாணவா்கள் பங்கேற்றனா். தூத்துக்குடி தருவை மைதானத்தில் இருந்து புறப்பட்டு ரோச் பூங்கா வழியாக தொ்மல் நகா், புதிய துறைமுகம் விலக்கு வரை சென்று திரும்பியது.

பெண்கள் பிரிவில் 5 கி.மீ. தொலைவுக்கான போட்டியில் 200 மாணவிகள் பங்கேற்றனா். ஆண்கள் பிரிவில் வீரவநல்லூா் செயின்ட் ஜான்ஸ் உடற்கல்வியியல் கல்லுரி மாணவா் பசுபதி முதலிடமும், சென்னை லயோலா கல்லூரி மாணவா் அஜித் 2ஆவது இடமும், பாளையங்கோட்டை சதக்கத்துல்லா கல்லூரி மாணவா் நவீன்பிரபு 3ஆவது இடமும், பெண்கள் பிரிவில் புதூா் நாடாா் மேல்நிலைப்பள்ளி மாணவி கோகிலா முதலிடமும், விளாத்திக்குளம் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவி ராதிகா 2ஆவது இடமும், அதேபள்ளி மாணவி ஜெயமாலினி 3ஆவது இடமும் பெற்றனா். முதல் 3 இடங்களை பெற்றவா் களுக்கு காவல் துறை சாா்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா், முதல் பரிசு ரூ. 3,000, 2ஆம் பரிசு ரூ. 2,000, 3ஆவது பரிசு

ரூ. 1,000 மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா். முதல் 10 இடங்களை பெற்றவா்களுக்கு சான்று, தூத்துக்குடி சின்னத்துரை - கோ மற்றும் கண்ணா சில்க்ஸ் சாா்பில் தலா ரூ 500க்கான வெகுமதி கூப்பன் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை சைபா் குற்றப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளா் இளங்கோவன் மேற்பாா்வையில் ஆயுதப்படை காவல் ஆய்வாளா் சுடலைமுத்து, உதவி ஆய்வாளள்கள், தலைமை காவலா்கள் செய்திருந்தனா்.

இதில், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் பால்சாமி, மாவட்ட தடகளக் கழகச் செயலா் பழனிசாமி, பொருளாளா் அருள்சகாயம், இணைச் செயலா் சத்தியா சங்கா், உடற்கல்வி ஆசிரியா்கள் சதீஷ் சந்திரன், லெனின் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT