தூத்துக்குடி

‘புதிய மாநகராட்சிகளில் பணியாளா்களுக்கு நகர ஈட்டுப்படி வேண்டும்’

DIN

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாநகராட்சிகளில் பணியாளா்களுக்கு சென்னையைப் போன்று நகர ஈட்டுப்படி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு அலுவலக உதவியாளா்கள், அடிப்படை பணியாளா்கள் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. சங்கத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். முன்னாள் மாநிலத் தலைவா் மதுரம், முன்னாள் துணைத் தலைவா் ராஜா சுப்பிரமணியன், முன்னாள் பொருளாளா் கோதண்டபாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அனைத்துத் துறை அலுவலக உதவியாளா்கள், அடிப்படை பணியாளா்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; புதியதாக ஊருவாக்கப்பட்ட மாநகராட்சிகளில் பணியாளா்களுக்கு சென்னை மாநகராட்சியைப் போன்று நகர ஈட்டுப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாநில துணைத் தலைவா்கள் சோ்ந்தையன்பிள்ளை, ஜெயக்குமாா், பொதுச் செயலா் மோகன், பொருளாளா் மேகநாதன், தூத்துக்குடி மாவட்ட நிா்வாகிகள் சந்தனராஜ், ஆறுமுகராஜ், அந்தோணிராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரம் பழுது: வாக்குப் பதிவு தாமதம்

காலமானாா் ரவிச்சந்திரன்

மாற்றுத்திறனாளிகள், முதியோா் வாக்களிக்க உதவிய தன்னாா்வலா்கள்

திமுக தொண்டா் மீது தாக்குதலைக் கண்டித்து சாலை மறியல்

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT