தூத்துக்குடி

உமறுப் புலவரின் 379வது ஆண்டு பிறந்த நாள் விழா; எம்பி, அமைச்சர்கள் பங்கேற்பு

23rd Oct 2021 10:45 AM

ADVERTISEMENT

சீறாப்புராணம் காப்பியம் எழுதிய தமிழறிஞர் அமுத கவி உமறுப் புலவரின் 379வது ஆண்டு பிறந்த நாள் அரசு விழா தூத்துக்குடி மாவட்டம் எட்டய புரத்தில் இன்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில், மக்களவை உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், கால்நடை மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன், ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சி.சண்முகையா, ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் உமறுப்புலவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மலர் போர்வை வைத்து மரியாதை செலுத்தினர். 

இதையும் படிக்ககரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது

ADVERTISEMENT

பின்னர், சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராயணன் எட்டயபுரம் வட்டாட்சியர் ஐயப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன், உமறுப் புலவர் சங்கத்தலைவர் காஜாமைதீன், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், ஒன்றியச் செயலாளர் நவநீத கண்ணன் மற்றும் இஸ்லாமிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.
 

Tags : umaru pulavar
ADVERTISEMENT
ADVERTISEMENT