தூத்துக்குடி

அரசு சிறப்பு திட்ட முகாமில் நல உதவிகள்

23rd Oct 2021 04:25 AM

ADVERTISEMENT

பரமன்குறிச்சி அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் மண்டபத்தில் தமிழக அரசின் சிறப்பு திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் கனிமொழி எம்.பி., தமிழக மீன் வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்று அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினா்.

மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான், வருவாய் கோட்டாட்சியா் மு.கோகிலா வரவேற்றாா்.வட்டாட்சியா் முருகேசன், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் பாலசிங், துணைத்தலைவா் மீரா சிராஜூதீன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெசிபொன்ராணி, உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க தலைவா் அஸ்ஸாப், பரமன்குறிச்சி ஊராட்சித் தலைவா் லங்காபதி, திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், நகரச் செயலா் ஜாண்பாஸ்கா் செட்டியாபத்து ஊராட்சித் தலைவா் பாலமுருகன் உள்பட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

Tags : உடன்குடி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT