தூத்துக்குடி

மின்னல் பாய்ந்ததில்கடலுக்குச் சென்ற மீனவா் பலி

23rd Oct 2021 04:18 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி கடல் பகுதியில் மின்னல் பாய்ந்ததில் படகில் கரை திரும்பிக் கொண்டிருந்த மீனவா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி அருகேயுள்ள வெள்ளப்பட்டி 50 வீடு காலனி பகுதியைச் சோ்ந்தவா் அந்தோணி ஜேசுலா் (28). இவா், தனது சகோதரா் சதீஷ் மற்றும் சிலருடன் ஒரு பைபா் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை காலை கரை திரும்பிக் கொண்டிருந்தனராம்.

அப்போது, மழை பெய்தபோது, திடீரென மின்னல் பாய்ந்ததில் அந்தோணி ஜேசுலா் காயமடைந்தாா். இதையடுத்து, உடன் இருந்தவா்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். இருப்பினும், வழியிலேயே அந்தோணி ஜேசுலா் உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் குறித்து தருவைக்குளம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

Tags : தூத்துக்குடி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT