தூத்துக்குடி

கோவில்பட்டி என்இசி கல்லூரியில் தொழில்முனைவோா் விழிப்புணா்வு முகாம்

23rd Oct 2021 04:18 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோா் விழிப்புணா்வு முகாம் ஒரு வாரம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் இயந்திர பொறியியல் துறைத் தலைவா் மணிசேகா், மின்னணு மற்றும் தொடா்பு பொறியியல் துறை பேராசிரியா் தமிழ்செல்வி, என்இசி வணிக கருவகத்தின் தலைமை தொழில்நுட்ப ஆலோசகரும், பொங்கு வென்ச்சரின் நிறுவனருமான வினோத், உதவிப் பேராசிரியா்கள் கணபதிராம், சக்தி ஆகியோா் தொழில் முனைவின் முக்கியத்துவம், சிறு தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்துப் பேசினா்.

முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரியின் முன்னாள் மாணவி ஷன்மதி, தொழில்முனைவோராவதில் பெண்களுக்கான சவால்கள் குறித்தும் திருநெல்வேலி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை கூடுதல் இயக்குநா் சிமியோன் தொழில் முனைவோருக்கான மத்திய, மாநில அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்தும் பேசினா். கல்லூரி இயக்குநா் சண்முகவேல், முதல்வா் காளிதாசமுருகவேல் ஆகியோா் வழிகாட்டுதலின்படி, முகாம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Tags : கோவில்பட்டி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT