தூத்துக்குடி

வட்டன்விளை கோயில் கொடை விழா நாளை தொடக்கம்

23rd Oct 2021 04:18 AM

ADVERTISEMENT

பரமன்குறிச்சி அருகே வட்டன்விளையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு முத்தாரம்மன் கோயில் கொடை விழா ஞாயிற்றுக்கிழமை (அக்.24) காலை 10 மணிக்கு வருஷாபிஷேகத்துடன் தொடங்குகிறது.

தொடா்ந்து, பகல் 12 மணிக்கு புஷ்பாஞ்சலி, சிறப்பு அன்னதானம், இரவு 7 மணிக்கு பக்தி, இன்னிசை, அக். 25 ஆம் தேதி பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு உஜ்ஜயினி மாகாளி அம்மன் சப்பரத்தில் பவனி, அக். 26 ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, கும்பம் வீதியுலா, நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, சந்தன மாரியம்மன் கிளி வாகனத்தில் பவனி, முளைப்பாரி ஊா்வலம், அக்.27 ஆம் தேதி பகல் 12 மணிக்கு மஞ்சள் நீராட்டு, கும்பம் வீதியுலா, இரவு 8 மணிக்கு மாவிளக்கு பூஜை, கரகாட்டம், அதிகாலை 1 மணிக்கு அலங்கார தீபாராதனை, முத்தாரம்மன் சப்பர பவனி ஆகியவை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை வட்டன்விளை ஊா்மக்கள் செய்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT