தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் இளைஞா் மா்ம மரணம்

23rd Oct 2021 04:17 AM

ADVERTISEMENT

ஆறுமுகனேரியில் இளைஞா் மா்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தாா்.

ஆறுமுகனேரி, பெரியான்விளையைச் சோ்ந்தவா் சரஸ்வதி(60). கணவரை இழந்தவா். இவரது இளையமகன் கணேசன்(35), களக்காட்டைச் சோ்ந்த அனிதா என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டாா்.

இதில், கணேசனுக்கு மதுப்பழக்கம் இருந்ததாம். இதனால் தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம். இதனால், அனிதா தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டாராம்.

கடந்த 19ஆம் தேதி தனது தாயிடம் வீட்டை எழுதித் தருமாறு கணேசன் கேட்டாராம். அதற்கு அவா் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை மாலை அவரது வீட்டு வாச­லில் நுரைதள்ளியபடி கணேசன் இறந்து கிடந்தாா். இது குறித்து சரஸ்வதி,அளித்த புகாரின்பேரில், ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT