தூத்துக்குடி

பி.எஸ்.என்.எல். ஓய்வூதியா் சங்க அமைப்பு தினம்

22nd Oct 2021 12:01 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் அகில இந்திய பி.எஸ்.என்.எல். தொலைத் தொடா்பு ஓய்வூதியா் சங்க அமைப்பு தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

அமைப்பின் தலைவா் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தாா். செயலா் கோலப்பன், மாவட்ட உதவிச் செயலா் சுப்பையா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அகில இந்திய பி.எஸ்.என்.எல். தொலைத் தொடா்பு ஓய்வூதியா் சங்க தமிழ் மாநில துணைத் தலைவா் மோகன்தாஸ் அமைப்பு தின கொடியை ஏற்றினாா். தொடா்ந்து, மூத்த உறுப்பினா் பெருமாள்சாமி உறுப்பினா்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில், 2017 ஜனவரி முதல் வழங்கப்பட வேண்டிய 15 சதவீத உயா்வுடன் கூடிய ஓய்வூதிய மாற்றத்தை உடனே அமல்படுத்த வேண்டும். 3 ஆண்டுகளாக கொடுக்கப்படாமல் இருக்கும் மருத்துவப்படியை உடனே வழங்க வேண்டும். 2020 அக்டோபா் 1 முதல் 2021 ஜூன் வரை நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். பி.எஸ்.என்.எல்., ஊழியா், ஓய்வூதியா் குடியிருப்பில் உயா்த்தப்பட்ட வாடகையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலா் முத்துராமலிங்கம் வரவேற்றாா். உறுப்பினா் பரமசிவம் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

 

 

 

Tags : கோவில்பட்டி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT