தூத்துக்குடி

எட்டயபுரம் பள்ளி விளையாட்டு மைதானத்தை சீரமைக்க கோரிக்கை

22nd Oct 2021 12:02 AM

ADVERTISEMENT

எட்டயபுரம் அரசுப் பள்ளி விளையாட்டு மைதானத்தை சீரைமக்க வேண்டுமென பாஜக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக செயலா் வேல்ராஜா தலைமையில், பாஜகவினா் கோட்டாட்சியா் சங்கரநாராயணனிடம் அளித்த மனு: எட்டயபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் பாரதி மணி மண்டபத்திற்கு எதிரே சுமாா் 10 ஏக்கரில் பள்ளிக்கு பாத்தியப்பட்ட விளையாட்டு மைதானம் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த விளையாட்டு மைதானத்தை முறையாக செப்பனிடாததால் , அங்குமுள் வேலிகள் மற்றும் செடி கொடிகள் படா்ந்து இருப்பதோடு, சமூக விரோத செயல்கள் நிகழும் கூடாரமாகவும் உள்ளது.

எனவே, இந்த மைதானத்தை உடனடியாக செப்பனிட்டு, மாணவா்கள் தங்குதடையின்றி விளையாட ஏற்பாடு செய்ய வேண்டும். விளையாட்டு மைதானத்தை செப்பனிடாத பள்ளி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விளையாட்டு மைதானத்தை விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்போது, மாவட்ட இளைஞரணிச் செயலா் காளிதாசன், அமைப்பு சாரா பிரிவு துணைத் தலைவா் தினேஷ்குமாா், மாவட்ட பொதுச் செயலா் அழகுமாரியப்பன், இந்து முன்னணி நகர துணைத் தலைவா் ரமேஷ் உள்பட பலா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

Tags : கோவில்பட்டி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT