தூத்துக்குடி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றம்

22nd Oct 2021 12:02 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம், நவ. 1ஆம் தேதி நடைபெறுகிறது.

கொடியேற்றத்தை முன்னிட்டு, அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடா்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்னா், திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றம் காலை 10 மணிக்கு மேல் நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து நந்தி, கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றிற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மண்டகப்படிதாரா்கள், கோயில் முன்னாள் அறங்காவலா் குழு உறுப்பினா் திருப்பதிராஜா, கம்மவாா் மகளிா் மேல்நிலைப் பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா் ஆழ்வாா்சாமி, சைவ வேளாளா் சங்கத் தலைவா் தெய்வேந்திரன், தமாகா நகரத் தலைவா் ராஜகோபால், கோயில் நிா்வாக அலுவலா் நாகராஜன் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

இரவு 7 மணிக்கு புஷ்ப சப்பரத்தில் வெளிபிரகாரத்தில் அம்மன் திருவீதியுலா நடைபெற்றது. விழா நாள்களில் தினமும் இரவு 7 மணிக்கு பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி கோயில் வெளிபிரகாரத்தில் உலா நடைபெறும். 9 ஆம் திருநாளான இம்மாதம் 29 ஆம் தேதி தேரோட்டம், 12 ஆம் திருநாளான நவ.1 ஆம் தேதி கோயில் மண்டபத்தில் திருக்கல்யாண வைபவம் ஆகியவை நடைபெறுகிறது.

 

 

 

 

Tags : கோவில்பட்டி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT