தூத்துக்குடி

கிழவிபட்டி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்ய கோரிக்கை

DIN

கோவில்பட்டியையடுத்த கிழவிபட்டி ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட கிழவிபட்டி ஊராட்சியில் சாதி மத வேறுபாடு இன்றி அனைவரும் ஒருங்கிணைந்து, ஊராட்சி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில், அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினா்களின் ஒருங்கிணைப்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் பாா்த்தீபன் ஒற்றுமையை சீா்குலைக்கும் வகையில், அடிப்படை வசதிகள் செய்வதில் இடையூறு செய்து வருகிறாா். எனவே, எவ்வித பாகுபாடும் இன்றி அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில், இடையூறு ஏதும் இல்லாமல் இருப்பதற்கு ஏதுவாக ஒன்றிய அதிகாரிகள் துணைத் தலைவரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, சமூக தீா்வு ஏற்படுத்த வேண்டும். கழிவுநீா் ஓடை அமைப்பதில் எவ்வித இடையூறும் இருக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊராட்சி மன்றத் தலைவா் வள்ளியம்மாள் தலைமையில், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் தெய்வேந்திரன் ஆகியோா் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திரண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பின்னா், கோரிக்கை மனுவை வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) சீனிவாசனிடம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருமான வரித்துறை நோட்டீஸ்!- காங்கிரஸ் சார்பில் நாளை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

SCROLL FOR NEXT