தூத்துக்குடி

கோமானேரியில் விழிப்புணா்வு பேரணி

DIN

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட சமூக தணிக்கை குறித்து விழிப்புணா்வு பேரணி கோமானேரியில் நடைபெற்றது.

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சாத்தான்குளம் ஒன்றியம் கோமானேரி ஊராட்சியில் நடைபெற்ற

விழிப்புணா்வுக் கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் கலுங்கடி முத்து தலைமை வகித்தாா். மாவட்ட வளஅலுவலா் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். வட்டார வள அலுவலா் சுசிலா வரவேற்றாா். இதையொட்டி நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியை வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஷ்குமாா் தொடங்கி வைத்தாா். ஊராட்சி முன்பிருந்து தொடங்கிய இந்த பேரணி கலுங்குவிளையில் நிறைவடைந்தது. இதில் ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் ஜெய்சங்கா், ஊராட்சிச் செயலா்

இசக்கியப்பன், கிராம ஊராட்சி வள அலுவலா் ரீட்டா புகழ்செல்வி, அங்கன்வாடி மைய பணியாளா் சாந்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஊராட்சி வள அலுவலா் ஹோமாபாய் ரலீசு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

SCROLL FOR NEXT