தூத்துக்குடி

தூத்துக்குடியில் பிஎஸ்என்எல் ஊழியா்கள் தா்னா

DIN

தூத்துக்குடியில் பிஎஸ்என்எல் ஊழியா்கள் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளா்களாக வேலை செய்யும் ஊழியா்களுக்கு கடந்த 13 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து, தூத்துக்குடி பிஎஸ்என்எல் ஊழியா் சங்கம், அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்கம் மற்றும் பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளா் சங்கம் ஆகியன சாா்பில் புதன்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.

பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, பிஎஸ்என்எல் ஊழியா் சங்க போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா்.

ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு 13 மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும், பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்களை ஆள்குறைப்பு செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

SCROLL FOR NEXT