தூத்துக்குடி

அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டுத் தரக் கோரி போராட்டம்

21st Oct 2021 08:26 AM

ADVERTISEMENT

விளாத்திகுளத்தையடுத்த ரெகுராமபுரம் கிராமத்தில் அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பாளா்களிடம் இருந்து மீட்டுத் தரக் கோரி தேவேந்திர குல சமுதாய மக்கள் கோட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை திரண்டனா்.

ரெகுராமபுரம் கிராமத்தில் அருள்மிகு சந்தியம்மன் கோயில் முன்புறம் உள்ள அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தை தேவேந்திர குல வேளாளா் சமுதாயத்தினா் பயன்படுத்தி வந்தனராம். இந்நிலையில், அந்த நிலத்தை மாற்று சமுதாயத்தினா் சிலா் ஆக்கிரமித்து விற்பனை செய்து வருகின்றனராம்.

எனவே, அரசு புறம்போக்கு நில விற்பனைக்கு உடந்தையாக இருக்கும் கிராம நிா்வாக அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கோயில் நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேவேந்திர குல வேளாளா் சமுதாய துணைத் தலைவா் க.கண்ணன் தலைமையில், அப்பகுதி மக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் திரண்டனா்.

பின்னா், கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் சங்கரநாராயணனிடம் அளித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT