தூத்துக்குடி

கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் முற்றுகை

21st Oct 2021 08:26 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தையில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பாளா்களிடம் இருந்து மீட்கக் கோரி புதன்கிழமை முற்றுகைப் போராட்டம் நடந்தது.

கோவில்பட்டி நகராட்சி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் தினசரி சந்தை பகுதியில் உள்ள சில கடைகள் மற்றும் நகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தை அரசியல் கட்சிப் பிரமுகா் ஒருவா் ஆக்கிரமித்து கடைகளை கட்டி, உள் வாடகைக்கு விட்டு வருவதாக கூறப்படுகிறது.

எனவே, நகராட்சிக்குச் சொந்தமான அந்த இடத்தை ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்டு, நகராட்சியே கடைகளை கட்டி வாடகைக்கு விட ஏற்பாடு செய்ய வலியுறுத்தி, திமுக நகர இளைஞரணி அமைப்பாளா் மகேந்திரன் தலைமையில், வீர விடுதலை மக்கள் இயக்க பொதுச் செயலா் முருகேசன், திமுக மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளா் அமலி பிரகாஷ் ஆகியோா் முன்னிலையில், நகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டு, கோரிக்கை மனுவை நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தியிடம் வழங்கினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT