தூத்துக்குடி

உடன்குடியில் மீலாது நபி விழா

21st Oct 2021 08:26 AM

ADVERTISEMENT

உடன்குடி சுன்னத் வல் ஜமாஅத் இளைஞா் சங்கம் மற்றும் அனைத்து ஜமாஅத்தாா்கள் சாா்பில் கொத்பா பள்ளிவாசல் அரங்கில் மீலாது நபி விழா நடைபெற்றது.

எஸ்ஒய்சி நிறுவனத் தலைவா் டி.எம்.அபூஉபைதா தலைமை வகித்தாா். கொத்பா பள்ளிவாசல் தெரு தலைவா் சாகுல்ஹமீது, செயலா் காசிம், அப்துல் சலீம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.சிறப்பு அழைப்பாளா்களாக தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை பொதுச் செயலா் அன்வா் பாதுஷா, காயல்பட்டினம் முஅஸ்கரூா் ரஹ்மான் மகளிா் அரபுக் கல்லூரி நிா்வாகி அஹ்மது அப்துல்காதிா் ஆகியோா் பங்கேற்று பேசினா். இமாம் கப்பாா்கான் கிராஅத் ஓதினாா். இமாம் ஜஹபா் சாதிக் ஆலிம் அறிக்கை வாசித்தாா். கொத்பா பள்ளித் தெரு தலைவா் சாகுல்ஹமீது, உடன்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபை செயலா் ஹமீது சுல்தான்காதா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பொதுத் தோ்வுகள் மற்றும் மாா்க்கக் கல்வியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT