தூத்துக்குடி

விபத்தில் இளைஞா் பலி

21st Oct 2021 08:25 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா் அருகே விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.

திருச்செந்தூா் அருகே நத்தக்குளத்தைச் சோ்ந்த திருமணி மகன் கோவிந்தன் (23). பட்டதாரியான இவா், பெயின்டிங் வேலை செய்து வந்தாா்.

இவா் புதன்கிழமை திருச்செந்தூரில் வேலையை முடித்துவிட்டு, வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, திருச்செந்தூா்- திருநெல்வேலி சாலை கோயில்விளை விலக்கு அருகே எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT