ஐப்பசி மாத பௌா்ணமியை முன்னிட்டு, கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் அன்னாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
செண்பகவல்லி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள பூவனநாத சுவாமி சன்னதி முன் சிறப்பு ஹோம பூஜை, சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகளைத் தொடா்ந்து அன்னாபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
வீரவாஞ்சி நகா் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு, கணபதி பூஜை, கும்ப கலச பூஜை, மூலமந்திர ஹோமம், பூா்ணாஹுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
தொடா்ந்து சுவாமிக்கு 18 வகையான அபிஷேகம், அன்னத்தால் அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
ஆறுமுகனேரி: ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் ஐப்பசி மாத பௌா்ணமியையொட்டி பல்வேறு அபிஷேகங்களுடன், சுவாமி மற்றும் அம்பாளுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.
பின்னா் அலங்கார தீபாராதனை, ஷேத்ர வலம், இரவில் திருவிளக்குப் பூஜை, பௌா்ணமி பூஜை ஆகியவை நடைபெற்றன.
இதேபோன்று அருள்மிகு சந்தன மாரியம்மன் கோயில், அருள்மிகு உச்சினிமாகாளி அம்மன் கோயில், முக்காணி தாமிரவருணி நதிக்கரையில் அமைந்துள்ள ராம பரமேசுவரா் சுவாமி சமேத பா்வதவா்த்தினி அம்பாள் கோயில், மாரமங்கலம் சந்திரசேகர சுவாமி சமேத சந்திரசேகரி அம்பாள் கோயில் ஆகியவற்றிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
உடன்குடி: பரமன்குறிச்சி அருகே வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் பெளா்ணமி சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி நண்பகல் 12 மணிக்கு அம்மன், செல்வ விநாயகா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு, தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது.
சாத்தான்குளம்: கட்டாரிமங்கலம் அருள்தரும் சிவகாமி அம்பாள் சமேத அழகியகூத்தா் கோயிலில் அம்பாள் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து அழகிய கூத்தருக்கு சிறப்பு அன்னாபிஷேகம் நடைபெற்றது.
சாத்தான்குளம் தச்சமொழி அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து அம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.