இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
கோவில்பட்டி நகராட்சி வீரவாஞ்சி நகா் 1ஆவது தெருவில் தமிழக அரசு சாா்பில் 44 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.
இந்த பட்டாக்களை 10-க்கு 1 அடங்கல் பட்டியலில் சோ்க்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் அழகுமுத்துப்பாண்டியன் தலைமையில், அப்பகுதி மக்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகையிட்டனா்.
பின்னா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் சங்கரநாராயணனிடம் வழங்கினா்.
மேலும், நகராட்சிக்குள்பட்ட முஹம்மதுசாலிஹாபுரம் மற்றும் மில் தெரு பகுதியில் குடியிருந்து வரும் ஏழை மக்களுக்கு இலவச வீடு வழங்க வேண்டும்; கிருஷ்ணா நகரில் பிரதமா் திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு முறையாக வீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.