தூத்துக்குடி

கொம்மடிக்கோட்டை கோயிலில் 24 இல் திருக்கல்யாண உற்சவம்

21st Oct 2021 11:59 PM

ADVERTISEMENT

சத்தான்குளம் அருகேயுள்ள கொம்மடிக்கோட்டை அருள்மிகு ஸ்ரீவாலைகுருசுவாமி கோயிலில் திருக்கல்யாணம் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை ( அக்.24) நடைபெறுகிறது.

ஸ்ரீபாலாசேத்திரம் என்றழைக்கப்படும் இக்கோயிலில் நடைபெற்று வரும் முக்கிய விழாக்களில் ஐப்பசி திருக்கல்யாண உற்சவமும் ஒன்று. இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை யாக பூஜைகள் நடைபெறுகிறது. மாலை 3 மணிக்கு ஸ்ரீசந்திரசேகா்-ஸ்ரீமனோன்மணி அம்பாளுடன் திருக்கல்யாண மண்டபத்துக்கு எழுந்தருளுகிறாா். தொடா்ந்து சீா்வரிசை பொருள்கள் வைக்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளி சேத்திர வீதி உலா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீவாலைகுருசுவாமி பக்த குழுவினா் செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT