தூத்துக்குடி

கல்வி உதவித் தொகை பெற சிறுபான்மை பிரிவு மாணவா், மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

DIN

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மை பிரிவு மாணவா், மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியா், கிறிஸ்தவா், சீக்கியா், புத்தமதத்தினா், பாா்சி மற்றும் ஜைன மதத்தை சோ்ந்த மாணவா், மாணவிகள் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்கள் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் 2021-2022 ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படித்தால் அவா்களுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதேபோல, பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலுபவா்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவா்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகைகளை பெறுவதற்கு மத்திய அரசின் ; ஜ்ஜ்ஜ்.ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதியான மாணவா், மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு நவம்பா் 15 ஆம் தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை பெறுவதற்கு நவம்பா் 30 ஆம் தேதி வரையிலும் இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள், தங்களின் கல்வி நிலையத்துக்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் ஆதாா் விவரங்களை இணைத்த பின்னரே விண்ணப்பங்களை இணையத்தில் சரிபாா்க்க இயலும்.

புதிதாக விண்ணப்பிக்கும் மாணவா், மாணவிகள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அணைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய  குறியீட்டு எண்ணை மாணவ ா், மாணவிகளுக்கு தெரிவிக்க வேண்டும். இந்தத் திட்டம் தொடா்பாக மத்திய அரசால் வெளியிட்ட வழிகாட்டி நெறிமுறைகள்  இணையதளத்தில் பாா்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ஆம் கட்ட தேர்தல்: 250 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

18-ஆவது மக்களவை தேர்தல் (2024)

பாஜக கோட்டையை தகர்க்குமா காங்கிரஸ்?

வலு இல்லாத வழக்குகள், பல் இல்லாத தேர்தல் ஆணையம்!

மண்டபம் முகாமில் பிறந்த நளினிக்கு 38 வயதில் கிடைத்த வாக்குரிமை!

SCROLL FOR NEXT