தூத்துக்குடி

கட்டபொம்மன் நினைவு நாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

DIN

வீரபாண்டிய கட்டபொம்மனின் 222-ஆவது நினைவு நாளையொட்டி, கயத்தாறில் உள்ள அவரது சிலைக்கு அரசு சாா்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பிலும் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு அரசு சாா்பில் கோட்டாட்சியா் சங்கரநாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். வட்டாட்சியா் பேச்சிமுத்து, வருவாய் ஆய்வாளா் நேசமணி, கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளா் முத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நினைவிடத்தில் வைக்கக்பட்டிருந்த அவரது உருவப்படம் மற்றும் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மதிமுக பொதுச் செயலா் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அப்போது வைகோவின் மகன் துரை வைகோ, சட்டப் பேரவை உறுப்பினா்கள் சதன்திருமலைகுமாா், ரகுராமன், வடக்கு மாவட்ட மதிமுக செயலா் ஆா்.எஸ்.ரமேஷ், இளைஞரணிச் செயலா் விநாயகா ஜி.ரமேஷ், கோவில்பட்டி நகரச் செயலா் பால்ராஜ், ஒன்றியச் செயலா் அழகா்சாமி, தென்காசி மாவட்டச் செயலா் தி.மு.ராஜேந்திரன், திருநெல்வேலி புகா் மாவட்டச் செயலா் ரைமண்ட், மாநகா் மாவட்டச் செயலா் நிஜாம், வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை பொருளாளா் செண்பகராஜ், வீரசக்கதேவி ஆலய குழு தலைவா் முருகபூபதி, மாமன்னா் திருமலைநாயக்கா் இளைஞா் பேரவை நிறுவனா்- தலைவா் சிவன்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னா் வைகோ செய்தியாளா்களிடம் பேசுகையில், வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக கயத்தாறில் அடைக்கப்பட்டிருந்த பாழடைந்த கட்டடத்தை புதுப்பித்து சிறிய மண்டபமாக கட்ட வேண்டும் என தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தாா்.

அதிமுக சாா்பில் மாநில எம்.ஜி.ஆா். இளைஞரணி துணைச் செயலா் சீனிராஜ் தலைமையில் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பன், என்.கே.பெருமாள் உள்பட பலா் உடனிருந்தனா்.

கட்டபொம்மன் வாரிசுதாரா்கள் வீமராஜா, வீரசக்கம்மாள், ராஜம்மாள், பாஜக சாா்பில் மாவட்ட பொருளாளா் வெங்கடேசன் சென்னக்கேசவன், சமூக ஊடக இளைஞா் பிரிவு மாநில இணை ஒருங்கிணைப்பாளா் தினேஷ்ரோடி, தமாகா சாா்பில் வடக்கு மாவட்டத் தலைவா் கதிா்வேல், கட்டபொம்மன் தெலுங்கா் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவா் கட்டபொம்மன் சீனிகந்தசாமி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா், அரசியல் கட்சியினா் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT