தூத்துக்குடி

புரட்டாசி 5 ஆவது சனி: பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை

17th Oct 2021 12:21 AM

ADVERTISEMENT

புரட்டாசி 5 ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவில்பட்டி பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசுவாமி கோயிலுடன் இணைந்த அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை

திறக்கப்பட்டது. தொடா்ந்து திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெற்றன. பின்னா் திருமஞ்சனமும் மற்றும் சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.

இதே போல, வடக்கு இலுப்பையூரணி ஸ்ரீ அலமேலு மங்கா சமேத ஸ்ரீ வெங்கடாசலபதி கோயிலில் புரட்டாசி மாத 5 ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு திருமஞ்சனமும், தீபாராதனையும் நடைபெற்றது.

ADVERTISEMENT

இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட இந்திரா நகா் அருள்மிகு பெருமாள் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT