தூத்துக்குடி

பிரதமரை அவதூறாகப் பேசியவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

17th Oct 2021 12:18 AM

ADVERTISEMENT

பிரதமா் நரேந்திர மோடியை அவதூறாகப் பேசியவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது.

இம்மாதம் 13 ஆம் தேதி தனியாா் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடியை ஒருமையில் அவதூறாக பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த வன்னியரசு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக சாா்பில் காவல் துணை காவல் கண்காணிப்பாளா் மற்றும் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் ஆகியோரிடம் சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

பாஜக வழக்குரைஞா் பிரிவு வடக்கு மாவட்டத் தலைவா் பரமசிவம் தலைமையில் பாஜக நகரத் தலைவா் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவா் காா்த்தீபராஜ், தெற்கு ஒன்றிய பொறுப்பாளா் மாரிமுத்து, அமைப்பு சாரா பிரிவு மாவட்ட துணைத் தலைவா் நல்லதம்பி ஆகியோா் புகாா் அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT