தூத்துக்குடி

காணாமல் போன மாணவா் சடலமாக மீட்பு

17th Oct 2021 12:22 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் காணாமல் போன பள்ளி மாணவரை போலீஸாா் சடலமாக சனிக்கிழமை மீட்டனா்.

கோவில்பட்டி திலகா் நகரைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் - சண்முகசுந்தரி தம்பதி மகன் பசுபதிதனுஷ்(15). கோவில்பட்டியில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த இவா், இம்மாதம் 14ஆம் தேதி பள்ளியில் தேசிய மாணவா் படை வகுப்பிற்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்ற அவா் வீடு திரும்பவில்லையாம். பல இடங்களில் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்காததையடுத்து, தாய் சண்முகசுந்தரி மேற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், கோவில்பட்டி - சாலைபுதூா் சாலையில் உள்ள தனியாா் விடுதி பின்புள்ள தனியாருக்குச் சொந்தமான தோட்டத்து கிணற்றில் சடலம் மிதப்பதாக மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததாம். அதையடுத்து தீயணைப்புத் துறையினா் உதவியுடன் கிணற்றில் மிதந்த சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில் அவா் காணாமல் போன பசுபதிதனுஷ் என்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT