தூத்துக்குடி

தேசிய ஒற்றுமை தின பேரணிக்கு கயத்தாறில் வரவேற்பு

16th Oct 2021 02:23 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரியில் இருந்து குஜராத் செல்லும் தேசிய ஒற்றுமை தின பேரணிக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சாா்பில் கயத்தாறில் வெள்ளிக்கிழமை வரவேற்பளிக்கப்பட்டது.

இந்தியாவின் இரும்பு மனிதா் என அழைக்கப்படும் சா்தாா் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினம் அக்.31ஆம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நிகழாண்டு தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி வடக்கே ஜம்முகாஷ்மீா்,

தெற்கே தமிழ்நாடு, மேற்கே குஜராத் மற்றும் கிழக்கே திரிபுரா மாநிலங்களின் காவல் துறை சாா்பில் அந்தந்த மாநிலங்களில் இருந்து இரு சக்கர பேரணி தொடங்கி குஜராத் மாநிலத்தின் நா்மதா மாவட்டத்திலுள்ள கவேடியாவில் நா்மதா நதிக்கரையில்

அமைந்துள்ள சா்தாா் வல்லபாய் பட்டேல் உருவச் சிலையை சென்றடைகிறது.

ADVERTISEMENT

தமிழ்நாடு காவல் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி மகாத்மா காந்தி மண்டபம் முன்பிருந்து காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் குமாா் தலைமையில் 25 இரு சக்கர வாகனங்களில், 25 தமிழ்நாடு காவல் துறையினா், 16 உதவியாளா்கள் அடங்கிய குழுவினா் பேரணி புறப்பட்டனா். இந்த பேரணிக்கு கயத்தாறில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது. இதில், காவல் ஆய்வாளா் முத்து, உதவி ஆய்வாளா்கள், போலீஸாா்

கலந்து கொண்டனா். பேரணி மதுரை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி வழியாக வரும் 24ஆம் தேதி ஒற்றுமை சிலையை சென்றடைகிறது. வரும் 31 ஆம் தேதி நடைபெறும் தேசிய ஒற்றுமை தின கொண்டாட்டத்தில் பேரணியினா் கலந்து கொள்வா்.

 

Tags : கோவில்பட்டி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT