தூத்துக்குடி

கட்டுப்பாடுகள் தளா்வு:திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

16th Oct 2021 02:23 AM

ADVERTISEMENT

கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டதையடுத்து திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

கரோனா பொது முடக்கத் தளா்வுகளின் ஒரு பகுதியாக, அனைத்து நாள்களிலும் கோயில்களில் பக்தா்கள் தரிசனம் செய்ய வெள்ளிக்கிழமை முதல் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை கோயிலுக்கு வந்த பக்தா்கள், வழக்கம்போல் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.

கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனையாகி தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.

Tags : திருச்செந்தூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT