தூத்துக்குடி

உலக மனநல வாரம்: விளையாட்டுப் போட்டிகள்

9th Oct 2021 01:15 AM

ADVERTISEMENT

உலக மனநல வாரத்தை முன்னிட்டு செமபுதூரில் உள்ள மனநல காப்பகத்தில் விளையாட்டு போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

கோவில்பட்டி அரசு மருத்துவமனை, மாவட்ட மனநல திட்டம் மற்றும் ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனத்தின் மூலம் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளை, மாவட்ட மனநல மருத்துவா் சங்கீதா தலைமை வகித்து, தொடங்கி வைத்தாா். இதில் பலூன் உடைத்தல், பாட்டிலில் நீா் நிரப்புதல், இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இதில், வென்றோா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், தொண்டு நிறுவனத் தலைவா் தேன்ராஜா, காப்பக காப்பாளா் அய்யப்பசாமி, மேற்பாா்வையாளா் மாடசாமி, உடற்கல்வி ஆசிரியா்கள் நவீன், பாலாஜி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT