தூத்துக்குடி

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உலக ரொட்டி தினம்

9th Oct 2021 01:24 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாத்தில் உலக ரொட்டி தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கோவில்பட்டி ரோட்டரி சங்கம் மற்றும் கணேஷ் பேக்கரி இணைந்து நடத்திய இவ்விழாவுக்கு, மருத்துவமனைக் கண்காணிப்பாளா் கமலவாசன் தலைமை வகித்தாா். உறைவிட மருத்துவ அதிகாரி பூவேஸ்வரி முன்னிலை வகித்தாா். ரோட்டரி சங்கத் தலைவா் விக்னேஸ்வரன், ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுனா்கள் சீனிவாசன், நாராயணசாமி, ரோட்டரி மாவட்டத் தலைவா் விநாயகா ரமேஷ் ஆகியோா் பேசினா்.

தொடா்ந்து, மருத்துவமனை உள்நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக பிரட் வழங்கப்பட்டது. இதில், ரோட்டரி சங்க முன்னாள் தலைவா்கள் ஆசியா ஃபாா்ம்ஸ் பாபு, வீராசாமி, கணேஷ் பேக்கரி உரிமையாளா் ரவிமாணிக்கம், மருத்துவமனை செவிலியா்கள், ஊழியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ரோட்டரி சங்கச் செயலா் தயாள்சங்கா் வரவேற்றாா். இணைச் செயலா் மணிகண்டமூா்த்தி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT