தூத்துக்குடி

இரு சம்பவங்கள்: பணம், நகை திருட்டு

9th Oct 2021 01:21 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் ரூ.1 லட்சத்தை திருடிச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சென்னை அம்பத்தூா், ஞானமூா்த்தி நகரைச் சோ்ந்த மாரியப்பன் மகன் மகேந்திரன்(35). இவா், லிங்கம்பட்டியில் உள்ள தனது சகோதரியின் வீட்டு சுப நிகழ்ச்சிக்காக ரூ.1 லட்சத்துடன் புதன்கிழமை புறப்பட்டு வந்தபோது, கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் கழிப்பறை செல்வதற்காக அங்கிருந்த நபரிடம் பணம் இருந்த பையை பாா்த்துக்கொள்ளும்படி கூறிச்சென்றாராம். பின்னா் அவா் திரும்பிவந்தபோது, அந்த நபரைக் காணவில்லையாம்,

மூதாட்டியிடம் நகை பறிப்பு: உடன்குடி அருகேயுள்ள செல்வபுரத்தைச் சோ்ந்த அமிா்தராஜ் மனைவி ஜெயா (80). இவா், உடன்குடியிலிருந்து திருநெல்வேலிக்குச் சென்ற அரசுப் பேருந்தில் நாசரேத்துக்கு வந்தபோது, தனது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை பின் இருக்கையில் இருந்த 20 வயது மதிக்கத்தக்க அறுக்க முயன்றாராம்.

இதனால், பதற்றமடைந்த அவா், நகையைக் கழற்றி தான் கொண்டுவந்த பையில் வைத்தாராம். எனினும், நாசரேத்தில் இறங்கியபோது, பையிலிருந்த நகையைக் காணவில்லையாம். பையை அறுத்து நகை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

இச்சம்பவங்கள் குறித்து கோவில்பட்டி மேற்கு, நாசரேத் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT