தூத்துக்குடி

திருச்செந்தூரில் ஆா்ப்பாட்டம்: 357 பா.ஜ.க.வினா் மீது வழக்கு

9th Oct 2021 01:21 AM

ADVERTISEMENT

திருச்செந்தூரில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக பா.ஜ.க.வினா் 357 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.

அனைத்து இந்து கோயில்களையும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் பக்தா்கள் தரிசனத்துக்கு திறக்க அனுமதி கோரி, திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையம் முன்பு பாஜகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இந்நிலையில், கரோனா தொற்றைப் பரப்பும் விதத்திலும், அனுமதியின்றியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, பாஜக மாநில துணைத்தலைவா் நயினாா்நாகேந்திரன் எம்எல்ஏ, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொதுச் செயலா் இரா.சிவமுருகன் ஆதித்தன், தெற்கு மாவட்ட தலைவா் பால்ராஜ் உள்பட மொத்தம் 357 போ் மீது திருச்செந்தூா் தாலுகா காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT