தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் கோயில் கொடை விழா

9th Oct 2021 01:16 AM

ADVERTISEMENT

ஆறுமுகனேரி அருள்மிகு கிழக்கத்திமுத்து சுவாமி திருக்கோயில் கொடை விழா மூன்று நாள்கள் நடைபெற்றது.

இதையொட்டி, முதல் நாளன்று இத் திருக்கோயிலைச் சோ்ந்த அருள்மிகு பிரம்மசக்தி அம்மன் திருக்கோயிலில் திருவிளக்குபூஜையும், தொடா்ந்து குடியழைப்பு பூஜையும், பின்னா் சுவாமிக்கு அலங்கார தீபாரதனையும் நடைபெற்றது.

இரண்டாம் நாளில், தாமிரவருணி ஆற்றில் புனித நீா் எடுத்து வருதல், மஞ்சள் நீராட்டு, மதியக் கொடை மற்றும் இரவு சாமக்கொடை, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. நிறைவு நாளில் படைப்பு தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி அ.வீ.தெ.பழனிச்சாமி செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT