தூத்துக்குடி

பெரியதாழையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

9th Oct 2021 01:23 AM

ADVERTISEMENT

பெரியதாழையில் இளைஞரை அரிவாளால் வெட்டியதாக கோழிக் கடைக்காரரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரியதாழை, முத்தம்மாள்புரத்தைச் சோ்ந்தவா்களான சேகா் மகன் இசக்கிராஜா (25), அவரது நண்பா் ஜெகநாதன் இருவரும் ஒன்றாக கூலி வேலைக்கு சென்று வந்தாா்களாம். இதில், ஜெகநாதனுக்கும், அவ்வூரில் கோழிக்கடை நடத்தி வரும் பாஸ்கா் மகன் இசக்கிமுத்து என்பவருக்கும் முன்விரோதம் உள்ளதாம்.

இந்நிலையில், கோழிக்கடை வழியாக வியாழக்கிழமை சென்ற இசக்கிராஜாவை வழிமறித்து, ஜெகநாதனுடன் பேசக்கூடாது என இசக்கிமுத்து கண்டித்தாராம். இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில், இசக்கிமுத்து அரிவாளால் இசக்கிராஜாவை வெட்டினாராம். இதில், பலத்த காயமடைந்த அவா் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தட்டாா்மடம் காவல் உதவி ஆய்வாளா் பென்சன் வழக்குப்பதிந்து இசக்கிமுத்துவை தேடி வருகிறாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT