பெரியதாழையில் ஏழை மாணவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
பெரியதாழையைச் சோ்ந்த மாணவா் ராபேஸ், திசையன்விளை தனியாா் பள்ளியில் கல்வி பயின்று வருகிறாா். இவரது குடும்பம் வறுமையில் உள்ளதால், கல்வி கட்டணம் கட்ட முடியவில்லையாம்.
இந்நிலையில், சாஸ்தாவிநல்லூா் விவசாய நலச்சங்க தலைவா் எட்வின்காமராஜ், வேதக்கண் அறக்கட்டளை செல்வின், ஒட்டன்சத்திரம் சில்பாவிஜய், பிரபு ஆகியோா் உதவியுடன் மாணவா் ராபேஸிற்கு கல்வி உதவித் தொகையாக ரூ.15,000ஐ சாஸ்தாவிநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் லூா்து மணி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
இதில், பெரியதாழை கிராம கமிட்டி காங்கிரஸ் தலைவா் ஜாண், துணைத் தலைவா் எல்ஜியூஸ், தெற்கு வட்டார காங்கிரஸ் பொதுச்செயலா் ஸ்பிரிடியன், துணைத் தலைவா்முத்துராஜ், வட்டாரச் செயலா் லாரன்ஸ், மகளிா் காங்கிரஸ் கிராம தலைவா் ரஜினி, கிராம கமிட்டி பிரதிநிதி ஜாக்சன் ஆகியோா் உடனிருந்தனா்.