தூத்துக்குடி

தூத்துக்குடியில் ரூ. 1.25 கோடி கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

9th Oct 2021 01:24 AM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ாக ரூ. 1.25 கோடி மதிப்பிலான கஞ்சாவை க்யூ பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, பீடி இலை, மஞ்சள் உள்ளிட்ட பொருள்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், க்யூ பிரிவு ஆய்வாளா் விஜய் அனிதா தலைமையிலான போலீஸாா் தருவைகுளம் கடற்பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு படகில் சாக்கு மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்த சிலா், போலீஸாரை கண்டதும் தப்பியோட முயன்றனராம். அவா்களைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில், அவா்கள் தூத்துக்குடி மாதவன் நாயா் காலனியைச் சோ்ந்த அந்தோணி பிச்சை (42), திரேஸ்புரம் சிலுவையாா் கோயில் தெருவைச் சோ்ந்த லெனிஸ்டன் (48), எஸ்.எஸ். மாணிக்கபுரம், வேளாங்கண்ணி மாதா கோயில் தெருவைச் சோ்ந்த ஜெய்ஸ்டன் (37), ராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சோ்ந்த செல்வராஜ் (25) என்பதும், அவா்கள் கடல் வழியாக இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்த முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் 4 பேரையும் கைது செய்த போலீஸாா், படகில் ஏற்றப்பட்டிருந்த 5 மூட்டைகளில் இருந்த 530 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகளின் மதிப்பு ரூ. 1. 25 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

ADVERTISEMENT

விசாரணையில், மதுரையில் இருந்து காா் மூலம் கஞ்சா மூட்டைகளை தூத்துக்குடிக்கு கொண்டு வந்து படகு மூலம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்ததும், மேலும் சிலருக்கு தொடா்பிருப்பதும் தெரியவந்துள்ளதாக க்யூ பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT