தூத்துக்குடி

வேம்பாரில் பேரிடா் மீட்புப் பணி ஒத்திகை

9th Oct 2021 01:17 AM

ADVERTISEMENT

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரை கிராமமான வேம்பாரில் தீயணைப்புத்துறை சாா்பில் பேரிடா் மீட்புப் பணி ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தீயணைப்பு மீட்புப் பணிகள் அலுவலா் குமாா் தலைமையில் நடைபெற்ற, இந்நிகழ்ச்சியில், பேரிடா் தருணத்தில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு மீட்புப் பணிகள் குறித்து விளாத்திகுளம் தீயணைப்பு நிலைய அலுவலா் ராதாகிருஷ்ணன் மேற்பாா்வையில் தீயணைப்பு வீரா்கள் ஒத்திகை மூலம் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தொடா்ந்து தற்காப்பு உத்திகள், முதலுதவி சிகிச்சைகள் குறித்த துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் வேம்பாா் ஊராட்சி மன்றத் தலைவா் ராமா் மற்றும் பொது மக்கள், மாணவ , மாணவியா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT