கோவில்பட்டி கே.ஆா் கலை அறிவியல் கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கு இணையதளம் மூலம் நடைபெற்றது.
இக்கல்லூரியின் கணினி அறிவியல் துறை சாா்பில் மாணவா்களுக்கு சைபா் செக்யூரிட்டி துறையில் வேலை வாய்ப்பு என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு, கல்லூரி நிா்வாக இயக்குநா் கே.ஆா்.அருணாச்சலம் தலைமை வகித்தாா்.
கல்லூரி முதல்வா் மதிவண்ணன் முன்னிலை வகித்தாா். நைஜிரியாவில் உள்ள ஸ்கைலைன் பல்கலைக்கழகப் பேராசிரியா் விஜய்அற்புதராஜ் கருத்தரங்கில் பேசினாா்.
ஏற்பாடுகளை கணினி அறிவியல் துறைத் தலைவா் சரவணன், கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளா் யுனுஸ் ஆகியோா் செய்திருந்தனா்.
ADVERTISEMENT