தூத்துக்குடி

தூத்துக்குடியில் விழிப்புணா்வு கருத்தரங்கம்

9th Oct 2021 01:16 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவத் துறையும், காமராஜ் கல்லூரி நாட்டுநலப்பணித் திட்டமும் இணைந்து நடத்திய கல்லூரி மாணவா், மாணவிகளுக்கான உடல் நலம் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் கல்லூரி கலையரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் து. நாகராஜன் தலைமை வகித்தாா். மருத்துவக் கல்லூரி சமூக மருத்துவத் துறை தலைவா் கே. சுனிதா கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசினாா். தொடா்ந்து, மாணவா், மாணவிகளிடையே உடல் நலம் குறித்து பயிற்சி மருத்துவா்கள் தனித்தனியே கலந்துரையாடினா்.

நிகழ்ச்சியில், காமராஜ் கல்லூரி நாட்டுநலப்பணித் திட்ட அலுவலா்கள் ஆ. தேவராஜ், பா. பொன்னுத்தாய், மருத்துவக் கல்லூரி சுகாதார கல்வி அலுவலா் டி. சங்கரசுப்பு மற்றும் கல்லூரி மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT