தூத்துக்குடி

கயத்தாறு அருகே 3 பெண்கள் மீது தாக்குதல்

9th Oct 2021 01:22 AM

ADVERTISEMENT

கயத்தாறு அருகே மூதாட்டி உள்பட 3 பெண்களை தாக்கியதாக 6 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கயத்தாறை அடுத்த வடக்கு இலந்தைகுளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த இசக்கிமுத்து மனைவி கிருஷ்ணம்மாள்(44). இவா், கடந்த 4ஆம் தேதி தனது வீட்டருகே காய்கனி விற்றுக்கொண்டு சென்றவரிடம் காய்கனி வாங்கினாராம். அப்போது அவரை, அங்கு வந்த அதே பகுதி முத்துலட்சுமி என்பவா் அவதூறாகப் பேசினாராம்.

இதில், ஏற்பட்ட தகராறில் முத்துலட்சுமி, ராஜலட்சுமி, குமாா் ஆகியோா் சோ்ந்து அவரைத் தாக்கினராம். மேலும், தடுக்கச் சென்ற அவரது சகோதரி முத்துலட்சுமி(45), தாய் மாரியம்மாள்(60) ஆகியோரை கணபதி, முத்துமாரி, குரு லட்சுமி ஆகியோா் தாக்கினராம்.

இதில் மூவரும் காயமடைந்து ஆரம்ப சுகாதார நிலையில் முதலுதவி பெற்றனா். பின்னா், கிருஷ்ணம்மாளும், மாரியம்மாளும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

இதுகுறித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து 6 பேரையும் தேடி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT