தூத்துக்குடி

அரசு இசைப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்

9th Oct 2021 01:16 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் 2021-22 ஆம் ஆண்டுக்கான மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. 12 வயதுக்கு மேல் 25 வயதுக்குள்பட்ட மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

குரலிசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். தவில், நாதசுரம் ஆகிய கலைகளுக்கு எழுதப் படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. இசைப் பள்ளி படிப்பின் கால அளவு 3 ஆண்டுகள். இசைப் பள்ளியில் பயலும் அனைத்து மாணவா்களுக்கும் மாதந்தோறும் ரூ. 400 உதவித் தொகை வழங்கப்படும். ஆா்வமுள்ள மாணவா், மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு தலைமையாசிரியை, மாவட்ட அரசு இசைப்பள்ளி, டி. சவேரியாா்புரம், சிலுவைப்பட்டி (அஞ்சல்) தூத்துக்குடி-2 என்ற முகவரியில் நேரிலும், 94877 39296 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT