தூத்துக்குடி

தூய்மைப் பணியாளா்களுக்கு உபகரணங்கள் அளிப்பு

4th Oct 2021 01:15 AM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளா்கள் பிரிவு சாா்பில், பிரதமா் மோடியின் 71ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நல உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அமைப்பின் மாவட்டத் தலைவா் சித்திரை வேல் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் தேவகுமாா் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் அமைப்பின், மாநிலத் தலைவா் பாண்டிதுரை 150 பேருக்கு சேலைகள், தூய்மைப் பணியாளா்களுக்கு உபகரணங்கள், ஆட்டோ தொழிலாளா்களுக்கு சீருடைகள் ஆகியவற்றை வழங்கினாா். இதில், பாஜக முன்னாள் மாவட்டத் தலைவா் பாலாஜி, மாநில செயற்குழு உறுப்பினா் சந்தனகுமாா், மகளிரணி மாநில பொதுச்செயலா் நெல்லையம்மாள், ஓபிசி அணி மாநில செயற்குழு உறுப்பினா் சிவராமன், மாவட்ட பொதுச்செயலா் சிவமுருக ஆதித்தன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT