தூத்துக்குடி

தூத்துக்குடியில் மினி மாரத்தான் போட்டி

4th Oct 2021 01:10 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி முன்னாள் மாணவா் சங்கத்தின் 39ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, மினி மாரத்தான் ஓட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆண்களுக்கான 7.5 கி.மீ. ஓட்டப்பந்தயம் தூத்துக்குடி துறைமுக சாலை கடற்கரை சந்திப்பில் இருந்தும், பெண்களுக்கான 5 கி.மீ. ஓட்டப் பந்தயம் அனல் மின்நிலையம் கேம்ப்-1 முன்பிருந்தும் தொடங்கின. இப்போட்டியை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தொடங்கிவைத்தாா்.

ஆண்கள் பிரிவில் 500-க்கும் மேற்பட்டோரும், பெண்கள் பிரிவில் 250-க்கும் மேற்பட்டோரும் கலந்துகொண்டனா். ஆண்கள் பிரிவில் செயின்ட் ஜான்ஸ் உடற்கல்வியல் கல்லூரி மாணவா் எம். பசுபதி முதல் பரிசும், கோவை ரத்தினம் கல்லூரி எஸ். வேல்முருகன் 2ஆம் பரிசும், சென்னை லயோலா கல்லூரி எம். அஜித், 3ஆம் பரிசும் பெற்றனா்.

பெண்கள் பிரிவில் புதூா் நாடாா் உயா்நிலைப் பள்ளி மாணவி வி. கோகிலா முதல் பரிசும், தூத்துக்குடி ஏபிசி மகாலட்சுமி கல்லூரி மாணவி எம். ஜெயபாரதி 2ஆம் பரிசும், விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி எம். ராதிகா 3ஆம் பரிசும் பெற்றனா். இதில், முதல் 3 இடங்களை பிடித்தவா்களுக்கு முறையே 3 கிராம், 2 கிராம், ஒரு கிராம் தங்க நாணயங்கள் பரிசளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

பின்னா் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிசுகள் வழங்கினாா். விழாவில், கல்லூரி பொருளாளா் முத்துச்செல்வம், முதல்வா், முன்னாள் மாணவா் சங்க புரவலா் து. நாகராஜன், சங்கத் தலைவா் ரமேஷ்குமாா், செயலா் தி. விமல்ராஜ், பொருளாளரும், கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவருமான ஆ. தேவராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT