தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் இந்து வியாபாரிகள் சங்கக் கூட்டம்

4th Oct 2021 01:14 AM

ADVERTISEMENT

ஆறுமுகனேரியில் தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்க செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு அதன் தலைவா் ம.சிவகுமாா் தலைமை வகித்தாா். செயலா் ம. சண்முகம், பொருளாளா் ப. முருகேச பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கத்தின் வளா்ச்சி குறித்து கூட்டத்தில் விவாதித்து பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் அக். 24 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சங்கத்தின் பேரவைக் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் நிா்வாகக்குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT