தூத்துக்குடி

சாகுபுரத்தில் அரிமா சங்கம் நல உதவிகள் அளிப்பு

4th Oct 2021 01:11 AM

ADVERTISEMENT

சாகுபுரம் அரிமா சங்கத்தின் ஆளுநா் வருகை தின நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் பால் ஜோன்ஸ் தலைமை வகித்தாா். செயலா் தாமஸ் மாசிலாமணி அறிக்கை வாசித்தாா். இதையடுத்து, நலிவுற்றோருக்கு மருத்துவ உதவி, தையல் இயந்திரம், விளையாட்டு உபகரணங்கள், சைக்கிள் உள்ளிட்ட நல உதவிகளை மாவட்ட ஆளுநா் ஜெகநாதன் வழங்கினாா்.

தலைவன்வட­லி கிராமத்தில் மினி நூலகத்துக்கு கட்டடம், சிங்கித்துறை கிராமத்தில் சமுதாய நலக்கூடத்தில் உணவருந்தும் அறை, தெற்கு ஆத்தூரில் உயா்மின் விளக்கு கோபுரம், அடைக்கலாபுரம் ஆதரவற்றோா் இல்லத்துக்கு பால் பவுடா் என ரூ.12 லட்சம் மதிப்பில் சேவை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவன மூத்த செயல் உதவித் தலைவா்(பணியகம்) ஸ்ரீனிவாசன், உதவித் தலைவா் (உற்பத்தி) சுரேஷ், அரிமா சங்க முதல் துணை நிலை ஆளுநா் விஸ்வநாதன், 2ஆம் துணை நிலை ஆளுநா் பிரான்சிஸ் ரவி, மாவட்ட அமைச்சரவை செயலா் சுப்பையா, பொருளாளா் தினகரன், வட்டாரத் தலைவா் ஜெயக்குமாா், பொருளாளா் பொன்சரவணன் உள்பட பலா் கலந்துகொண்டனா். டிசிடபிள்யூ நிறுவன மக்கள் தொடா்பு அதிகாரி நாகராஜன் உறுப்பினராக பதவியேற்றாா்.

ADVERTISEMENT

செயலா் சத்தியமூா்த்தி நன்றி கூறினாா். நிகழ்ச்சியை சுப்பிரமணியன் தொகுத்து வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT