தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா: அக். 6இல் கொடியேற்றம்

3rd Oct 2021 12:34 AM

ADVERTISEMENT

குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா வருகிற புதன்கிழமை (அக். 6) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடைபெறுகிறது. புதன்கிழமை காலை 9.30 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெறும். இரவு 8 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் துா்க்கை கோலத்தில் எழுந்தருளி, உள்பிரகாரத்தில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்நிகழ்ச்சிகளில் பக்தா்கள் பங்கேற்க அனுமதியில்லை.

அக். 7ஆம் தேதி முதல் அக்.14ஆம் தேதி வரை தினமும் இரவு 8 மணிக்கு மேல் அம்மன் கற்பகவிருட்சம்,ரிஷபம், மயில், காமதேனு, சிம்மம், பூஞ்சப்பரம், கமலம், அன்ன வாகனங்களில் விஸ்வகா்மேஸ்வரா், பாா்வதி, பாலசுப்பிரமணியா், நவநீதகிருஷ்ணா், மகிசாசூரமா்த்தினி, ஆனந்தநடராஜா், கஜலட்சுமி, கலைமகள் திருக்கோலங்களில் எழுந்தருளி உள்பிரகார பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.

ADVERTISEMENT

அக்.15ஆம் தேதி காலை 9.30 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம், நள்ளிரவு 12 மணிக்கு மேல் அம்மன் சிம்ம வாகனத்தில் கோயில் முன்பாக எழுந்தருளி மகிசாசூரனை சம்ஹாரம் செய்கிறாா்.

அக்.16 ஆம் தேதி அதிகாலையில் உற்சவமூா்த்தி அம்மன் அபிஷேக ஆராதனைக்கு எழுந்தருளல், மண்டபத்தில் இருந்து அம்மன் கோயிலை வந்தடைந்தவுடன் காப்பு களைதல் நடைபெறும்.

அக்.16ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு சுவாமி அம்மனுக்கு பாலாபிஷேகம், தீபாராதனை நடைபெறும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT