தூத்துக்குடி

விளாத்திகுளம் பகுதியில் கிராம சபைக் கூட்டம்

3rd Oct 2021 12:35 AM

ADVERTISEMENT

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, விளாத்திகுளம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ராமச்சந்திராபுரம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் சீதாலட்சுமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சுப்புலட்சுமி முன்னிலை வகித்தாா். விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலா் எஸ். கண்ணபிரான் ஆகியோா் கலந்துகொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனா்.

கூட்டத்தில், ஊராட்சி வரவு செலவு கணக்கு சமா்ப்பித்தல் மற்றும் கிராம வளா்ச்சித் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் சங்கரநாராயணன், வட்டாட்சியா் ரகுபதி, காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரகாஷ், வேளாண்மை துணை இயக்குநா்கள் முருகப்பன், கோகிலா, புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவபாலன், பிரபு, ஒன்றியக் குழு உறுப்பினா் பெருமாள்சாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT