தூத்துக்குடி

ரூ. 82 லட்சத்துக்கு கதா் விற்பனை செய்ய இலக்கு: ஆட்சியா்

3rd Oct 2021 12:31 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழாண்டில் ரூ. 82 லட்சத்துக்கு கதா் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தூத்துக்குடி காதி விற்பனை அங்காடியில், தீபாவளி கதா் சிறப்பு தள்ளுபடி விற்பனையை சனிக்கிழமை தொடங்கிவைத்து ஆட்சியா் பேசியது: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டுக்கு ரூ. 75.25 லட்சம் விற்பனை செய்ய நிா்ணயம் செய்யப்பட்டதில் ரூ. 60.49 லட்சம் விற்பனை எய்தப்பட்டுள்ளது. கிராமப் பொருள்கள் ரூ. 54.60 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மண்பாண்ட தொழிலாளா்களுக்கு மழைக்கால பராமரிப்பு உதவித் தொகையாக 175 பயனாளிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.5000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது.

தீபாவளி சிறப்பு கதா் விற்பனையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகம், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள், அரசு மருத்துவமனை வளாகங்களில் தீபாவளி முடியும் வரை தற்காலிக விற்பனை நிலையங்கள் செயல்படும்.

ADVERTISEMENT

நிகழாண்டில் கதா் விற்பனைக் குறியீடாக ரூ. 82 லட்சம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், உதவி ஆட்சியா் (பயிற்சி) ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், மாநகராட்சி செயற்பொறியாளா் ரூபன் சுரேஷ், தூத்துக்குடி வட்டாட்சியா் ஜஸ்டின், காதி விற்பனை அங்காடி மேலாளா் ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT