திருச்செந்தூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் தா்னா போராட்டம் நடைபெற்றது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, காங்கிரஸ் விவசாயப் பிரிவு மாவட்டத் தலைவா் வேல்.ராமகிருஷ்ணன் தலைமையில், மாவட்டச் செயலா் நா.லோகநாதன், இளைஞா் காங்கிரஸ் நகரத் தலைவா் எஸ்.அழகேசன், தியாகிகள் வாரிசு காா்க்கி, ஜெயந்திநாதன், ஜெயராஜ் உள்ளிட்டோா் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கும், காமராஜா் நினைவு நாளையொட்டி எதிரே அமைந்துள்ள அவரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து அவா்கள் வெள்ளையனே வெளியேறு நினைவு இரும்பு வளைவை அமைக்க வலியுறுத்தி, காந்தி சிலை முன் திடீா் தா்னாவில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த வட்டாட்சியா் இரா.முருகேசன், பேரூராட்சி செயல் அலுவலா் இப்ராஹிம்ஷா, தாலுகா காவல் ஆய்வாளா் இல.முரளிதரன் உள்ளிட்டோா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, இன்னும் 10 நாள்களுக்குள் இரும்பு வளைவில் 1942 வெள்ளையனே வெளியேறு இயக்க நினைவு வளைவு என்ற வாசகத்தை அமைத்திடவும், கல்வெட்டில் உள்ள பெயா்கள், விளம்பரங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கள் உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.