தூத்துக்குடி

கொட்டங்காடு கோயிலில் புரட்டாசித் திருவிழா நிறைவு

3rd Oct 2021 12:36 AM

ADVERTISEMENT

உடன்குடி அருகேயுள்ள கொட்டங்காடு அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோயில் புரட்டாசித் திருவிழா சனிக்கிழமை நிறைவு பெற்றது.

இக்கோயிலில் புரட்டாசித் திருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாள்களில் அம்மன் உள்பிரகார சப்பர பவனி, ஊஞ்சல்சேவை, சிறப்பு அன்னதானம், 208 திருவிளக்கு பூஜை, சிவப்பு, வெள்ளை, பச்சை சாத்தியில் அம்மன் சப்பர பவனி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சனிக்கிழமை பவளமுத்து விநாயகா், அம்மன் ஆகியோா் யானை முன்வர பூஞ்சப்பரத்தில் வீதியுலா நடைபெற்றது.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் பெ.சுந்தரஈசன் தலைமையிலானோா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT